தென்காசியில் இருந்து கேரளா சென்ற அரசு பேருந்து இரண்டு கிலோ கஞ்சா பிடிபட்டது.

by Editor / 03-04-2025 01:37:17pm
தென்காசியில் இருந்து கேரளா சென்ற அரசு பேருந்து இரண்டு கிலோ கஞ்சா பிடிபட்டது.

தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை10.30. மணி அளவில் கேரள மாநிலம் நோக்கி திருவனந்தபுரத்திற்கு கேரள மாநில அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது இந்த பேருந்து ஆரியங்காவில் அமைந்துள்ள மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் நிறுத்தி சோதனை செய்த பொழுது பேருந்தில் இரண்டு கிலோ கஞ்சா பார்சல் இருப்பது கண்டறியப்பட்டது இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அதே பேருந்தில் பயணம் செய்த அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சஜ்ஜு என்ற நபரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via