முதலமைச்சர் அறிவிப்புக்கு ஓபிஎஸ் வரவேற்பு

by Editor / 03-04-2025 01:24:29pm
முதலமைச்சர் அறிவிப்புக்கு ஓபிஎஸ் வரவேற்பு

முதலமைச்சர் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனை வரவேற்றுள்ள ஓபிஎஸ், முத்துராமலிங்க தேவருக்கு உடன் பிறந்த சகோதரராக ஆதரவாக இருந்தவர் மூக்கையா தேவர். மூக்கையா தேவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 

 

Tags :

Share via