புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று சிறப்பு கூட்டம்

தேசிய தலைநகர் டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. மக்களவை கூட்டத்தொடர் பிற்பகல் 1.15 மணிக்கும், மாநிலங்களவை கூட்டத்தொடர் பிற்பகல் 2.15 மணிக்கும் தொடங்கும். காலை 9.30 மணிக்கு புகைப்பட அமர்வு நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் அனைத்து எம்பிக்களும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் கூடுவார்கள். பின்னர், அவர்களுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
Tags :