உதயநிதியின் காலம் இனி பொற்காலம்: அமைச்சர் துரைமுருகன்
உதயநிதி இந்த இயக்கத்தை நடத்தும் காலம் மீண்டும் ஒரு பொற்காலமாக இருக்கும்" என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியிருக்கிறார். விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் துரைமுருகனின் பேச்சு கவனம் ஈர்த்திருக்கிறது. திமுகவிற்குள் எந்த ஒரு எதிர்ப்புமே இல்லாமல் உதயநிதி வளர்ந்து வருவதை துரைமுருகனின் பேச்சு காட்டுகிறது.
Tags :