16 கிலோ குட்கா பறிமுதல் மயிலம் அருகே வியாபாரி கைது

by Staff / 24-09-2023 05:33:12pm
16 கிலோ குட்கா பறிமுதல் மயிலம் அருகே வியாபாரி கைது

மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டையில் 16 கிலோ குட்கா பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். மயிலம், ஜக்காம்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன், 62; தேசிய நெடுஞ்சாலையில் பங்க் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மயிலம் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு சென்று கடையை சோதனை செய்தனர். அதில், 16 கிலோ அளவிலான குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, முருகனை கைது செய்து, 16 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via
Logo