தவெ..க தலைவர் விஜய் புதுச்சேரியில் 10.30 மணி அளவில் பொதுக்கூட்டத்தில் பரப்புரை .

by Admin / 08-12-2025 07:56:04pm
 தவெ..க தலைவர் விஜய்  புதுச்சேரியில் 10.30 மணி அளவில் பொதுக்கூட்டத்தில் பரப்புரை .

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்  செவ்வாய் அன்றுபுதுச்சேரி துறைமுக உப்பள பகுதியில் 10.30 மணி அளவில் பொதுக்கூட்டத்தில் பரப்புரை நிகழ்த்த உள்ளார். கடந்த வாரம் விஜய் பங்கேற்க ரோடு ஷோ  நடத்த வேண்டி புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழக ப்பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மனு அளித்திருந்தார். புதுச்சேரி ரோடு மிகவும் குறுகளானதால் அங்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை என்று மறுக்கப்பட்டதால் டிசம்பர் 5 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெற்று தற்போது அதற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்ட நிலையில், நாளை பொதுக்கூட்டம் நிகழ உள்ளது. இக்கூட்டத்தில் ,தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் 5,000 பேருக்கு மட்டும் க்யூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.  தமிழகம் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.  சிறுவர்கள், கற்பினிப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல்.. தொலைக்காட்சி நேரலைகளில் பார்க்குமாறும் வாகனங்களை கடற்கரை பகுதிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களில்  மட்டுமே நிறுத்த வேண்டும் என்றும் பேனர்களை, கட்டவுட்களை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கின்றன. கரூர் சம்பவத்திற்கு பிறகு பல்வேறு பாதுகாப்பு வளையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நிகழ்வுறும் பகுதிகளில் குடிப்பதற்கு தண்ணீர் வைக்கப்பட்டுள்ளன. சீருடை அணிந்த தொண்டர் படையினர் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via

More stories

Logo