ஒரு மேடையில் 11,304 பேர் நடனம்

by Staff / 14-04-2023 12:35:36pm
ஒரு மேடையில் 11,304 பேர் நடனம்

அசாமின் பாரம்பரிய நடனமான பிஹு நடனம், ஒரே மேடையில் 11,304 கலைஞர்களை ஒன்றிணைத்து நிகழ்த்தி வரலாறு படைத்தது. 2 கின்னஸ் உலக சாதனைகள் ஒரே நேரத்தில் பதிவு செய்யப்பட்டன. கவுகாத்தியில் உள்ள சருசஜாய் ஸ்டேடியத்தில் 7000 நடனக் கலைஞர்கள் மற்றும் 3000க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் 30 நிமிடங்கள் நடனமாடி பிரம்மிக்க வைத்தனர். இந்த நிகழ்வானது மிகப்பெரிய பிஹு நடன நிகழ்ச்சி மற்றும் மிகப்பெரிய பாரம்பரிய இசை நிகழ்ச்சிக்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுள்ளது. அம்மாநில முதல்வர் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via