பாதாள சாக்கடை திட்டம் குளறுபடி -தலைகுப்புறசாய்ந்த சரக்கு வாகனம்.

by Admin / 05-07-2021 04:50:51pm
பாதாள சாக்கடை திட்டம் குளறுபடி -தலைகுப்புறசாய்ந்த சரக்கு வாகனம்.

பாதாள சாக்கடை திட்டம் குளறுபடி -தலைகுப்புறசாய்ந்த சரக்கு வாகனம்.

 

வேலூரில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டிய பள்ளங்களை சரியாக மூடாமல் ஏதோ கணக்கு காட்ட வேண்டுமே என்ற எண்ணத்தில் தனியார் காண்டிராக்ட் ஊழியர்கள் தரமற்ற மண்ணை போட்டு மூடி செல்கிறார்கள். பாதுகாப்பற்ற இந்த பாதாள சாக்கடை திட்டத்துக்கான பணிகளால் அந்த வழியே செல்லும் கார், எம்டி லாரி, லோடு லாரி ஆகிய வாகனங்கள்  பாதாளத்திற்குள் அதாவது ரோட்டின்  பள்ளத்திற்குள் புதைந்து விடுகிறது. அதை கிரேன் மூலம் மீட்க சில ஆயிரம் ஆகிவிடும். பணம் ஆனால் கூட பரவாயில்லை. தெருவில் பொதுமக்களின் அன்றாட பணிகள் ஸ்தம்பித்து விடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. அப்படி ஒரு சம்பவம் வேலூர் வசந்தபுரத்தில் இன்று பகலில் நடந்ததை தான் படத்தில் பார்க்கிறீர்கள். செங்கல் லோடு லாரி பாதாள சாக்கடைக்கான மூடிய பள்ளத்தில் புதைந்து கிடக்கிறது. இதர வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன் படுத்த முடியாமல் அவதிப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo