தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை சென்னையில் இன்று மிதமான மழை வாய்ப்பு.

by Editor / 06-05-2025 10:09:59am
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை சென்னையில் இன்று மிதமான மழை வாய்ப்பு.

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் 50 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை

Share via