பெண் உயிரிழப்பு

by Staff / 19-08-2024 11:32:33am
 பெண் உயிரிழப்பு

கொடைக்கானல் சின்னூர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் கடந்த 10 நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் இருந்தார். தற்போது மழை குறையவும், இளைஞர்கள் சிலர் டோலி கட்டி சுமார் 5 கி.மீ. நடந்து அப்பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாரியம்மாள் இன்று காலை உயிரிழந்தார்.

 

Tags :

Share via