பள்ளி சமையல் கூடத்தில் கேஸ் கசிந்து தீ விபத்து

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே செம்பளாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சத்துணவு கூட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சத்துணவு அமைப்பாளர், உதவியாளர், உதவியாளரின் மகன் உள்ளிட்டோர் தீ தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Tags :