சென்னை தொழிற்சாலையில் வெடிகுண்டு மிரட்டல்.. தெறிக்க ஓடிய பணியாளர்கள்

by Editor / 17-04-2025 02:35:05pm
சென்னை தொழிற்சாலையில் வெடிகுண்டு மிரட்டல்.. தெறிக்க ஓடிய பணியாளர்கள்

சென்னை ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு துறைக்குச் சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலமாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த மத்திய அரசு பணியாளர்கள், தொழிற்சாலையில் இருந்து தெறித்து ஓடினர். தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.


 

 

Tags :

Share via

More stories