பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று தொடக்கம்

by Admin / 29-01-2022 02:12:57pm
 பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று தொடக்கம்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் திங்களன்று தொடங்க உள்ளது கூட்டத்தொடரின் முதல் இரு நாட்களிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து ஜீரோ ஹவர் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் திங்களன்று தொடங்கவுள்ளது கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளின்  கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார்.

பிப்ரவரி முதல் நாளில் 2022 2023 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 11 ஆம் நாள் நிறைவடையும் இரண்டாவது அமர்வு மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 அன்று நிறைவடையும் மார்ச் 18ஆம் நாள் ஹோலியையொட்டி  நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாது.

கூட்டத்தொடரின் முதல் நாளில் குடியரசுத்தலைவர் உரையாற்ற உள்ளதாகவும் இரண்டாவது நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அந்த இரு நாட்களிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்பும் ஜீரோ ஹவர்  இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2ஆம் நாள் முதல்  ஜீரோ ஹவர்  இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories