2,500 ஊழியர்கள் பணி நீக்கம்? கேரள அலுவலகத்தை மூடிய பைஜூஸ்;
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ் கேரளாவின் திருவனந்தபுரம் அலுவலகத்தை மூடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் பைஜூஸ் நிறுவனத்தின் கிளையில் இருந்து ஒரேநாளில் 173 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் வேலையை இழந்த ஊழியர்கள் இது தொடர்பாக கேரள தொழில்துறை அமைச்சர் சிவன்குட்டியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல்.
Tags :