கேரள சிபிஎம் மூத்த தலைவர் கே.வி.ராமகிருஷ்ணன் காலமானார்

கேரள சிபிஎம் மூத்த தலைவரும், முன்னாள் மாநிலக் குழு உறுப்பினருமான கே.வி.ராமகிருஷ்ணன் (74) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் சிறிது காலம் ஓய்வில் இருந்த அவர், சமீபத்தில் பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார். கே.வி.ராமகிருஷ்ணன் பழைய பாலக்காடு மாவட்டம் பொன்னானி தாலுகாவில் உள்ள குமரநெல்லூரில் ஏப்ரல் 8, 1950 இல் பிறந்தார்.
Tags :