உச்சகட்ட பாதுகாப்பில் ராமேஸ்வரம். 

by Editor / 06-04-2025 10:00:59am
உச்சகட்ட பாதுகாப்பில் ராமேஸ்வரம். 

பிரதமர் மோடி இன்று (ஏப். 06) தமிழகத்திற்கு வருகிறார். ராம நவமி நாளான இன்று, நண்பகல் 12 மணியளவில், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து, சாலை பாலத்திலிருந்து ஒரு ரயிலையும், கப்பலையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மோடியின் ராமேஸ்வரம் வருகையையொட்டி மோப்ப நாய் உதவியுடன் பாலத்தில் நிபுணர்கள் தீவிர சோதனை நடத்துகின்றனர். 

 பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 06) பகல் 12 மணிக்கு திறந்து வைத்த பின்னர் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். மோடி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு தரிசன கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்கள் நீராடவும், சுவாமி தரிசனத்திற்கும் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : உச்சகட்ட பாதுகாப்பில் ராமேஸ்வரம் 

Share via