லாரி தீயில் எரிந்து நாசம்

by Staff / 27-09-2022 04:27:16pm
லாரி தீயில் எரிந்து நாசம்

ஆந்திராவில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிப்பட்டிக்கோட்டை அருகே கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது டீசல் டேங்கில் பற்றிய தீ மளமளவென எரிந்ததால் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. லாரியை ஓட்டி வந்த சுரேஷ் என்ற ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.சம்பவம் குறித்து அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் போராடி தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.அரவக்குறிச்சி காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via

More stories