10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

by Editor / 22-08-2022 09:41:39pm
10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

அரசு தேர்வு துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணை தேர்வு முடிவுகள் நாளை மாலை 3 மணிக்கு www.dge.tn.gov.im என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை உள்ளீடு செய்து மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். மறு கூட்டல் முடிவுகள் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதில் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories