அமைச்சரின் துணையுடன் தான் கனிம வள கடத்தல் நாம் தமிழர் கட்சி நிர்வாகி குற்றச்சாட்டு

by Staff / 02-05-2023 04:32:21pm
அமைச்சரின் துணையுடன் தான் கனிம வள கடத்தல்  நாம் தமிழர் கட்சி நிர்வாகி குற்றச்சாட்டு

அமைச்சரின் துணையுடன் தான் கனிம வள கடத்தல் நடைபெறுவதாக குமரி மாவட்டம் அருவிக்கரை பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி குற்றச்சாட்டு கூறியதால் பரபரப்பு. கேரளாவுக்கு கனிம வள கடத்தலை தடுக்க வேண்டும் என்று திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது  எம்எல்ஏவாக இருந்த மனோ தங்கராஜ்  போராட்டம் நடத்தி மக்களை ஏமாற்றினார். ஆனால் தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்னர் மத்திய அரசு தான் தடை விதிக்க வேண்டும் என்று தற்போது நாடகமாடுகிறார். அன்று போராட்டம் நடத்திய போது மத்திய அரசுதான் தடுக்க வேண்டும் என்பது  தெரியவில்லையா. மத்திய அரசுக்கு எதிராக ஏன் போராடவில்லை. அமைச்சருக்கு  கூட 20 க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் கனிம வள கடத்தலில் ஈடுபடுகின்றதாக கூறப்படுகிறது.  நெல்லை மாவட்ட திமுக எம் பியின் கனரக டாரஸ் லாரிகளும் கனிமவள கடத்தலில் ஈடுபடுகின்றன. மோட்டார் வாகன விதி மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பாடி உயரத்தை அதிகரித்து அதிக பாரம் ஏற்றிச் செல்கின்றன. மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் இந்த குற்றச்சாட்டால் போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்     

 

Tags :

Share via