நிலக்கரி உரிமைத் தொகை செலுத்தாவிட்டால் நிலக்கரி எடுக்க தடை

by Staff / 26-03-2022 03:58:54pm
நிலக்கரி உரிமைத் தொகை செலுத்தாவிட்டால் நிலக்கரி எடுக்க தடை

பொதுத் துறையைச் சேர்ந்த நிலக்கரி நிறுவனங்கள் ஜார்கண்ட் மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் வழங்காவிட்டால் சுரங்கங்களை அரசே எடுத்துக்கொள்ளும் என முதலமைச்சர் ஹேம்நாத்  தெரிவித்துள்ளார்.

ராஞ்சியில்  சட்டப்பேரவையில் பேசிய அவர் மாநில அரசின் உரிமை தொகையை செலுத்தாவிட்டால் நிலக்கரி சுரங்கங்களை சுற்றி தடுப்புகள் ஏற்படுத்தப்படும் என குறிப்பிட்டார் .

இதுகுறித்து ஏற்கனவே மத்திய நிலக்கரித் துறைக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவித்தார் இந்த நிலையில் அளவு நிலக்கரி வெட்டி எடுப்பதில் சத்தீஸ்கருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் ஜார்கண்ட் மாநிலம் உள்ளது

 

Tags :

Share via

More stories