மதுரையில் கைதி தப்பி ஓட்டம்: ஆயுதப்படை காவலர் இருவர் சஸ்பெண்ட்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பகவதி ராஜா(34). கடந்த 2021 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஜூன் 15 முதல் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன் தினம் வழக்கு விசாரணைக்காக மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுதப்படை காவலர்கள் சரவணகுமார் பாலமுருகன் ஆகிய இருவரும் பகவதி ராஜாவை திருநெல்வேலி கோர்ட்டில் ஆஜர் படுத்தி விட்டு மீண்டும் மதுரைக்கு அழைத்து வந்தனர்.
இரவு 9:45 மணி அளவில் மதுரை மாட்டுத்தாவணி வந்து இறங்கிய நிலையில் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட சென்றபோது பகவதிராஜா தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடிய கைதி பகவதி ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர். அஜாக்கிரதையாக இருந்த ஆயுதப்படை காவலர்கள் சரவணகுமார் பாலமுருகன் ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் காவல் ஆணையாளர் லோகநாதன்.
Tags : மதுரையில் கைதி தப்பி ஓட்டம்: ஆயுதப்படை காவலர் இருவர் சஸ்பெண்ட்