தமிழக வாழ்வுரிமைக் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கு வோடு பேச்சு வார்த்தையில் தா வ க தலைவர் வேல்முருகன் குறைந்தபட்சம்2 முதல் 10 தொகுதிகள் வரை கூறினார். ஆனால், திமுக தரப்பில் ஒன்னு அல்லது ரெண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன் வந்ததால் ,அதிருப்தி அடைந்த வேல்முருகன் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசித்த பிறகு இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் மட்டும் இல்லாமல் 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த கோரிக்கைகள் ஏற்கப்படாததும் இந்த பிரிவிற்கு ஒரு காரணமாக அமைந்தது.
Tags :



















