திமுக-வினர் தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவது வேதனையின் உச்சம் - இபிஎஸ்

by Staff / 31-10-2023 01:32:49pm
திமுக-வினர் தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவது வேதனையின் உச்சம் - இபிஎஸ்

திமுக-வினர் தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவது வேதனையின் உச்சம் - இபிஎஸ்
அரக்கர்கள், அசுரர்கள், கிங்கரர்கள் என்று புராணக் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் யாரும் அவர்களைக் கண்டதில்லை. அந்தக் குறையைப் போக்க ஆளும் திமுக-வினர் அவதாரம் எடுத்து, தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவது வேதனையின் உச்சமாகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பெரம்பலூரில், திமுக நிர்வாகிகள் என்ற பெயரில் 300 குண்டர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து கல்குவாரி டெண்டரை தங்களுக்கே தர வேண்டும் என்றும், திமுக-வினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளி பெறக்கூடாது என்றும் மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளின் கைகள் ஆட்சியின் மேலிட கோமான்களால் கட்டப்பட்டுள்ளதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo