பாஜக தலைவரை கொன்ற நக்சலைட்டுகள்

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கன்வீனர் திருப்பதி கட்லான் வெள்ளிக்கிழமை மாலை நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டார். ஜான்பட் பஞ்சாயத்தை சேர்ந்த திருப்பதி கட்லா திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது டாய்னார் கிராமத்தில் இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
Tags :