கண்ணதாசன் மொழிகள் தரும் நீதி 

by Editor / 07-08-2021 06:42:48pm
கண்ணதாசன் மொழிகள் தரும் நீதி 

 

சந்தர்ப்பம் வாய்க்காத திறமையோ திறமை இல்லாதவனுக்கு கிடைக்கும் சந்தர்ப்பமும் பயன்படுவதில்லை.
எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.


இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை ஜாக்கிரதையாக கையாள வேண்டும், இதே மாதிரி இரண்டு பக்கமும் சேரக்கூடிய மனிதர்கள் ஓடும் ஜாக்கிரதையாகவே பழகவேண்டும்.


குளிக்கும் அறையில் மெதுவாக செல்லவில்லையெனில் வழுக்கி விழுவாய், வசதியாக இருக்கும் போது ஜாக்கிரதையாக வாழவில்லையெனில் கடனில் வழுக்கி விடுவாய்.நிலத்தில் வரும் 
களைகள் பெரிய மரங்களாவதில்லை, அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.


அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே.
சாக்கடை என்பது மோசமான பகுதிதான். ஆனால் அப்படி ஒன்று இல்லாவிட்டால் ஊரை சாக்கடை ஆகிவிடும்.
அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெற முடியாது, அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.


மீன் நீரிலே வாழ்வது ஆச்சரியமில்லை, அந்த நீரிலேயே கொதித்து சாவதுதான் ஆச்சரியம். மனிதனுக்கு நினைவுகள் இருப்பதும் ஆச்சரியமில்லை, அதிலேயே வெந்து மடிவது தான் வியப்பு.
மனிதனுடைய திறமை பெரிதல்ல, கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனை பிரகாசிக்கச் செய்கிறது.

 

Tags :

Share via