வன்னியர் சங்க மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி

by Editor / 25-04-2025 01:55:48pm
வன்னியர் சங்க மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி

வன்னியர் சங்கம் நடத்தும் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்களின் விவரங்களை டிஎஸ்பி அலுவலகத்தில் அளித்து முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அனுமதி அட்டையை வாகனங்களில் ஒட்டியிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இருசக்கர வாகனங்களில் வர அனுமதி இல்லை. மாநாட்டை இரவு 10 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வரும் மே 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் மாநாடு நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via