13 வயது சிறுமிக்கு லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் கைது
மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த நாகன் என்ற 21 வயது இளைஞர், 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து, தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த தொல்லையை தாங்க முடியாத மாணவி, இதுகுறித்து தனது பாட்டியிடம் கூறியுள்ளார். தொடர்ந்து, போலீசில் பாட்டி புகார் அளித்த நிலையில், இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
Tags :
















.jpg)


