மீன் பிடிக்க தடை விலை உயரும் அபாயம்.
மன்னார் வளைகுடா கடலில் இந்த மாதம் மீன்கள் இனப்பெருக்கம் நடைபெறும். இந்த காலத்தில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்தால், மீன் வளம் குறைய வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக, ஆண்டுதோறும் 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags : மீன் பிடிக்க தடை விலை உயரும் அபாயம்.