பயிற்சி விமானம் கோவில் கோபுரத்தில் மோதி விபத்து

மத்தியப் பிரதேசத்தின் ரேவா நகரில் உள்ள விமான ஓடுபாதையில் பயிற்சி விமானம் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். பயிற்சியாளர் பலத்த காயம் அடைந்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சோர் ஹடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட உம்ரி கிராமத்தில் உள்ள கோவில் கோபுரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :