பெண்ணிடம் அத்துமீறிய டிஎஸ்பி பணியிடை நீக்கம் -பலாத்கார வழக்கில் போலீசார் கைது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் மதுகிரி பகுதி டிஎஸ்பியாக இருப்பவர் ராமச்சந்திரப்பா(58). இவர் நிலப்பிரச்னை தொடர்பாக புகார் அளிக்க வந்த இளம்பெண்ணை அலுவலகத்தின் கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை ஜன்னல் வழியாக மறைந்து நின்ற அடையாளம் தெரியாத ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். மேலும், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரப்பாபு தலைமறைவானார். இச்சம்பவம் குறித்து ராமசந்திரப்பாபு இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாகி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், இதுவரை எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாக சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
Tags : பெண்ணிடம் அத்துமீறிய டிஎஸ்பி பணியிடை நீக்கம் -பலாத்கார வழக்கில் போலீசார் கைது.