சிறுமி கடத்தி வன்கொடுமை.. குற்றவாளியின் புகைப்படம் வெளியானது

திருவள்ளூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரின் தெளிவான புகைப்படம் வெளியானது. 8 நாட்களாக சிக்காத இளைஞரின் புகைப்படம், சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அதனை போலீசார் வெளியிட்டுள்ளனர். 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 8 தனிப்படைகள் அமைத்து 7 நாட்களாகியும் இதுவரை குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இதனால், “பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டமா?” என சிறுமியின் உறவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Tags :