பிரேசிலில் கடும் வெள்ளப்பெருக்கு - 22 பேர் பலி

by Staff / 06-09-2023 05:00:48pm
பிரேசிலில் கடும் வெள்ளப்பெருக்கு - 22 பேர் பலி

பிரேசில் நாட்டில் புயல் மற்றும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பெய்த கனமழையால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கின. இந்த புயல் தெற்கு பிரேசிலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். ஆறுகள் நிரம்பி வழிவதால், ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் 100க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பிரேசில் தொடர்ந்து காலநிலை பேரழிவுகளை சந்தித்து வரும் சூழலில், அந்த வரிசையில் தற்போதைய பெருமழை வெள்ளமும் இணைந்துள்ளது.

 

Tags :

Share via

More stories