கைவிலங்குடன் தப்பியோடிய விசாரணை கைதிக்கு வலை

by Staff / 19-08-2023 04:45:43pm
கைவிலங்குடன் தப்பியோடிய விசாரணை கைதிக்கு வலை

தென்காசி கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவரை திருட்டு வழக்கில் கேரளாவின் இடுக்கி மாவட்டம் மறையூர் போலீசார் கைது செய்தனர். அவர் திருடிய நகைகளை மீட்பதற்காக, கடந்த 17ஆம் தேதி பாலமுருகனை போலீசார் திருச்சிக்கு அழைத்து சென்றனர். நேற்றிரவு திண்டுக்கல் கொடைரோடு அருகே வந்தபோது போலீசாரிடம் பாலமுருகன் 'டீ' வேண்டும் என கூறியுள்ளார். போலீசார் பாலமுருகனுக்கு ரொட்டி, டீ வாங்கி கொடுத்தனர். தொடர்ந்து, சிறுநீர் கழிக்கச் செல்வதாக கூறி பாலமுருகன் கைவிலங்குடன் இருட்டில் தப்பியோடினார். இதுகுறித்து நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் தனிப்படை போலீசார் பாலமுருகனை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo