புதுச்சேரியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரியின் ஜான்குமார் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றபோது தப்பியோட முயன்ற அரவிந்த், தினேஷ் என்பவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கஞ்சா விற்றது உறுதியானதால் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல் துறை கைது செய்தது. இந்த நிலையில் அவர்களிடம் இருந்து 1,120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :