62 நாடக கலைஞர்கள் பங்கேற்கும் இசையார்ந்த நாட்டிய நாடகம் -வீரமங்கை வேலுநாச்சியார்
மருது சகோதரர்களின் ஆதரவுடன், ஹைதர் அலி, கோபால்நாயக்கர் ஆகியோரின் படை உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்றுதிரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப் படையினை உருவாக்கி, 7 ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றிப் பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார் வீரமங்கை வேலுநாச்சியார். அதன்பின் 1789-ம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார்.
வடஇந்திய ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே, விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப் பெண்மணி வேலுநாச்சியார்.
இந்திய விடுதலை வரலாற்றில் வீரம் நிறைந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் தமிழக அரசும், ஓ.வி.எம். தியேட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து 62 நாடக கலைஞர்கள் பங்கேற்கும் இசையார்ந்த நாட்டிய நாடகம் இன்று (28.8.22) மாலை 5.30 மணிக்கு நவ இந்தியா இந்துஸ்தான் கலை கல்லூரியில் நடைபெறுகிறது.
முன்னோர் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் அரசின் இந்த முயற்சியை பயன்படுத்தி, வீரமங்கை வேலுநாச்சியார் குறித்து நாமும் அறிந்து கொள்வோம்..
Tags : வீரமங்கை வேலுநாச்சியார்