பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு திட்டம்-அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு

by Admin / 11-08-2021 02:44:34pm
பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு திட்டம்-அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு

பழங்குடியின மக்களின் நலனை பேணும் வகையில் அவர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் பழங்குடி நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூரில் சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு பழங்குடியின மக்களுக்கு நாவா அமைப்பின் சார்பில் கட்டணமில்லா தொலைபேசி சேவையை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு தமிழக வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியாசாஹூ, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர்வி.சி.ராகுல், திருப்பத்தூர் மாவட்ட  கலெக்டர் அமர் குஷாவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
இதில், பங்கேற்ற ஆதிதிராவிடர்நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கட்டணமில்லா தொலைபேசி (180042-51576) சேவையை தொடங்கி வைத்துப் பேசியதாவது:-

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சுமார் 7.95 லட்சம் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 36 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பழங்குடியின மக்களின் நலனை பேணும் வகையில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் பழங்குடி நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பழங்குடியின மக்களுக்கு குடிசை வீடுகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு மின்சார வசதியும் வழங்கப்பட்டுள்ளது. என்றார்.

 

Tags :

Share via