கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

by Editor / 18-06-2025 02:26:12pm
 கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல், சின்னாளப்பட்டி அருகே பிள்ளையார்நத்தம், AD காலனி பகுதியைச் சேர்ந்த நாகேஸ்வரன் மகன் பாலகிருஷ்ணன் (34) இவர் கொத்தனார் ஆவார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் குடும்பப் பிரச்சினை காரணமாக மனஉளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்த தகவல் அறிந்த சின்னாளப்பட்டி காவல் நிலையச் சிறப்புஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories