குட்டூர் மலைக்கிராமத்தில் போடப்பட்ட சாலை தரமற்ற முறையில் உள்ளது அண்ணாமலை குற்றச்சாட்டு

by Editor / 19-08-2022 02:37:09pm
குட்டூர் மலைக்கிராமத்தில் போடப்பட்ட சாலை தரமற்ற முறையில் உள்ளது அண்ணாமலை குற்றச்சாட்டு

 திருவண்ணாமலை மாவட்டம் குட்டூர்  மலை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை பெண் ஒருவர் கைகளால் பெயர்த்து எடுக்கும் வீடியோ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பின் தங்களது கிராமத்தில் சாலை அமைக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த மலைவாழ் மக்களுக்கு இது அதிர்ச்சி அளிப்பதாகவும் 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தரமற்ற சாலையை  அதிகாரிகள் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via