பாத்திரத்தில் தலையை விட்டு மாட்டிகொண்ட ஒன்றரை வயது குழந்தை

by Editor / 19-08-2022 02:31:59pm
பாத்திரத்தில்  தலையை விட்டு மாட்டிகொண்ட ஒன்றரை வயது குழந்தை


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாத்திரத்தில் தலையை விட்டு மாட்டிகொண்ட ஒன்றரை வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.கிளாக்குளத்தை  சேர்ந்த பழனிச்சாமி ஒன்றரை வயது குழந்தை அஜித் சமையலறையில் உள்ள பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பாத்திரம் அஜித்தின் தலையில் சிக்கிக்கொண்டது .குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் பாத்திரத்தை எடுக்க முயன்றும்  முடியாததால் பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். அங்கு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை வெட்டி அகற்றினர்.

 

Tags :

Share via

More stories