தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரக் கொள்முதல் விற்க தடை

by Editor / 19-08-2022 02:40:33pm
தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரக் கொள்முதல் விற்க தடை

மின்பகிர்மான நிறுவனங்கள்  5 ஆயிரத்து 885 கோடி ரூபாய் பாக்கி தொகையை செலுத்த தவறியதால் தமிழ்நாடு ஆந்திரா மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்ற மையத்திடம் மின்சாரத்தை வாங்கவோ விற்கவோ இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பில் தயாரிக்கப்பட்ட இரண்டரை மாதங்கள் வரை தொகையை செலுத்த அவகாசம் அளிக்கப்படும் நிலையில் அதைக் கடந்தும் செலுத்தாத காரணத்தால் 13 மாநிலங்களில் உள்ள 27 மின் பகிர்மான நிறுவனங்கள் மின்சாரக் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு முதல்முறையாக தடை விதிக்கப்பட்டு உள்ளது .இந்த நடவடிக்கையால் 13 மாநிலங்களில் மின்தடை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo