சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிக்கும் அதிகார மசோதாவை குடியரசு தலைவர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.

by Admin / 30-12-2025 12:17:37am
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிக்கும் அதிகார மசோதாவை குடியரசு தலைவர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சரே துணை வேந்தர்களின் நியமிக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் (2022) தமிழக அரசால் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் இந்த மசோதாவிற்கு எந்த விதமான பதிலையும் மூன்று ஆண்டுகளாக அழைக்காமல் நிலுவையில் இருந்தது. தமிழக ஆளுநர் ஆர் .என் .ரவி குடியரசு தலைவருக்குபரிசீலனைக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்த மசோதா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசு தலைவர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.. மசோதாவில் உள்ள சில அம்சங்கள் குறித்து விளக்கம் கேட்டோ அல்லது சில திருத்தங்களை வலியுறுத்தியோ இது திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிகிறது. சென்னை பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தின் பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் நீண்ட காலமாக துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Tags :

Share via

More stories