நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை சரியாக வளர்த்து இருந்தால் அவரை என்னை இன்று இப்படி தூற்ற மாட்டார் .டாக்டர் ராமதாஸ்
இன்று சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸ் குறித்து மிகுந்த வேதனையுடனும் கண்ணீருடன் உரையாற்றினார்.. அன்புமணி தன்னை மார்பிலும் உதிகளும் ஈட்டியால் குத்துவது போல் செயல்படுகிறார் என்றும் சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு தன்னை தினமும் காயப்படுத்துவதாகவும் உருக்கமாக தெரிவித்தார். நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை சரியாக வளர்த்து இருந்தால் அவரை என்னை இன்று இப்படி தூற்ற மாட்டார் என்று கண்ணீர் மல்க கூறினார் .ஒரு தந்தை தன் மகனுக்கு செய்ய வேண்டியதை விட அதிகமாகவே தான் செய்துள்ளதாகவும் ஆனால் அவர் தன்னை தினமும் அவமானப்படுத்துவதாக குறிப்பிட்டார். அன்புமணியின் செயல்பாடுகளுக்கு வரும் தேர்தல்களில் காலம் தகுந்த பதில் சொல்லும் என்பதை வலியுறுத்தும் வகையில் அவருக்கு வரும் தேர்தலில் பதிலடி கொடுப்போம் என்று பேசினார். கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் மீண்டும் பாமக தலைவராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்புமணி ராமதாஸ் கட்சியிலிருந்து இணைக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .மேலும் அவரது மனைவி சௌமிய அன்புமணி பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகார ராமதாஸிற்கு வழங்கப்பட்டது..
Tags :


















