ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12000 கனடியாக அதிகரிப்பு.

கர்நாடகா மாநிலங்களில் மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு நேற்று அதிகரித்தது வெளியேற்றப்பட்டது.
நேற்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 7000ஆயிரம் கன அடியாக வந்தது. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்த கனமழை காரணமாக கர்நாடகா தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது இந்த நீர் வரத்து காரணமாக நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 7000 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போதைய நிலவரப்படி மேலும் அதிகரித்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக உள்ளது.
மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நீர்வரத்து கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீராலோ அல்லது ஆங்காங்கே காவிரி கரையோர பகுதிகளில் பெய்யக்கூடிய மழையினாலோ நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
Tags : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12000 கனடியாக அதிகரிப்பு