10ஆம் வகுப்பு மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய ஜிம் பயிற்சியாளர் கைது

திருவள்ளூர் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய ஜிம் யிற்சியாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் அரவிந்தன் (21) என்பவர் அதன் பயிற்சியாளராகவும் உள்ளார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது 10ஆம் வகுப்பு மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து அதை காட்டி மிரட்டியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல் ஆய்வாளர் லில்லி புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மாணவி ஆன்லைன் வகுப்பு கற்க வாங்கிய செல்போனில் அரவிந்தன் ஆபாசப் படங்களை எடுத்து காண்பித்து மிரட்டியதாக தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் லில்லி அரவிந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :