டிட்வா புயல் தமிழ்நாட்டை நெருங்கி வருவதால் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
டிட்வா புயல் தமிழ்நாட்டை நெருங்கி வருவதால் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 6 ஆயிரம் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 28 பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். .இந்திய வானிலை ஆய்வு மையத்தின் படி ட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதி நிலை கொண்டுள்ளது. இது வடக்கு, வட மேற்கு திசை நகர்ந்து வடக்கு தமிழ்நாடு -புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பகோணத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய ஊர்களில் அறுந்து விழுந்த மின்சாரம் கம்பியில் மிதித்து 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags :



















