தி.மு.க தலைமையிலான கூட்டணியினர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக...

by Admin / 11-11-2025 03:24:11pm
தி.மு.க தலைமையிலான  கூட்டணியினர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக...

தி.மு.க தலைமையிலான முற்போக்குக் கூட்டணியினர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக, இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்... சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில், தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப்  பட்டியலிலிருந்து  நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளதுகுழப்பங்கள் நிறைந்ததாகவும், வாக்காளர்களின்  வாக்குரிமையைப்  பறிக்கும் வகையிலும் உள்ளதாகக் கூட்டணியினர் கருதுகின்றனர்இந்தச் செயல்பாடு, ஆளும் பாஜக அரசுக்குச்  சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதி என்று தமிழக முதலமைச்சா்  மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.. . வாக்காளர் பட்டியல்  திருத்தப் பணிகள்  வடகிழக்கு பருவமழை  காலத்துடன்  ஒத்துப்போவதால், வாக்காளர்கள் படிவங்களைச் சரியாகப் பூர்த்தி செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளத..இந்த விவகாரம் தொடர்பாக, திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில். வழக்குத் தொடர்ந்துள்ள. தி.மு.க தலைவர் மு..க..ஸ்டாலின், "வாக்குரிமையைப் பறிக்க அச்சுறுத்தும் வாக்காளர் பட்டியல்  திருத்தப் பணிகள்ஆபத்திற்கு எதிராக சட்ட ரீதியாகவும், கள அளவிலும் போராட்டம் நடைபெறுகிறது. நமது மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க நமது முயற்சிகளைத் தொடருவோம்" என்று தெரிவித்துள்ளார..

தி.மு.க தலைமையிலான  கூட்டணியினர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக...
 

Tags :

Share via