நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுப்பதாக நெல்லை ஆட்சியரிடம் தம்பதி புகார்
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை என்ஜி.ஓ. "ஏ" காலனி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.மீனா கலா. இவர் தனது கணவருடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வி.விஷ்ணுவிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1990 ஆம் ஆண்டு என்னுடைய தந்தை ஸ்ரீதர், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. "ஏ" காலனியில் உள்ள 13.80 சென்ட் நிலத்தையும், அதில் இருந்த பழைய வீட்டையும் எனது பெயரில் உயில் எழுதி, பதிவு செய்து வைத்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு எனது தந்தை இறந்துவிட்டார்.
அதன் பின்னர் வீட்டிற்கு எனது பெயரில் மாநகராட்சியில் வரிவிதிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், திருநெல்வேலி மாநகரம் மகிழ்ச்சி நகரை சேர்ந்த ஜான் கென்னடி மற்றும் அருள் மாணிக்கம் ஆகியோர் கூலிப்படையினர் உதவியுடன் கடந்த 14 ஆம் தேதி எனது காம்பவுண்ட் சுவரின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்து தகர செட் அமைத்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நானும், எனது கணவரும் அவர்களிடம் சென்று கேட்டபோது அவர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே, எந்த ஆவணமும் இல்லாமல் எங்கள் இடத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எங்கள் நிலத்தை மீட்டுத் தரவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
Tags :