ரூபி மனோகரன் மீதான சஸ்பெண்ட் நிறுத்தி வைப்பு. தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் ராவ்

by Editor / 24-11-2022 09:43:46pm
ரூபி மனோகரன் மீதான சஸ்பெண்ட்  நிறுத்தி வைப்பு. தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ்  ராவ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கும், கே.எஸ்.அழகிரி ஆதரவாளர் ரஞ்சன் குமார் தரப்பினருக்கும் இடையே கடந்த 15ந்தேதி மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் தொடர்பாக  நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறி ரூபி மனோகரனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவித்தார்.

இந்நிலையில் இந்த நடவடிக்கையை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிறுத்திவைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு மேற்கொண்டு வரும் விசாரணைகளையும் நிறுத்திவைப்பதாக தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணை இயற்கை நீதி கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். உரிய முறையில் இந்த விசாரணை நடைபெறவில்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : எம்.எல்.ஏ ரூபி மனோகரன்

Share via

More stories

Logo