தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் நியமனம்.
தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கான மாவட்டச் செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள் ,செயற்குழு உறுப்பினர்கள் என மாவட்டத்திற்கு 15 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர் .இதுகுறித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வழங்கி உள்ள நியமனக் கடிதத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு கழகப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் விதமாக கழக அமைப்பானது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி மொத்தம் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
கழக விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பின்வரும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் புதிதாக பொறுப்பேற்கும் மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் .இந்த புதிய நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .
கட்சியினரோடு கலந்து பேசும்பொழுது பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் வெளியே அனுப்பப்பட்டதாக வும் கட்சியின் பொறுப்பாளர்கள் நியமனத்தில் பணம் யாரேனும் பெற்றுள்ளார்களா என்றும் கேள்வி கேட்கப்பட்டதாகவும் அது போன்ற முறைகேடில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்றும் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்ததாகவும் தகவல்
Tags :