குடியரசு துணைத் தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணனுக்குபிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், ஒரு தமிழர் துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெருமை. சவால்களை முறியடித்து அர்ப்பணிப்பு பணியோடு உழைத்ததன் விளைவாக கிடைத்த மாபெரும் வெற்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம் என கூறியுள்ளார்.
Tags : குடியரசு துணைத் தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணனுக்குபிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து.



















